என்னுடைய உளறல்கள்




Friday, November 19, 2010

வணக்கம் சமையல்

அப்பாடா, ஒரு வழியா, எதை போடுவது போடுவதுன்னு யோசித்து யோசித்து, தலையெல்லாம் சொட்டையாவதற்கு முன்னாடி என் கண்ணில் பட்டது, சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, வணக்கம் சமையல் என்ற அருமையான, பெருமையா, அம்சமான நிகழ்ச்சி தான்

என்னடா அப்படி என்ன அந்த நிகழ்ச்சியில் இருக்குன்னு யோசிக்கிறீங்க, ஒரு பிரபலமான குக் (cook) கூட்டிட்டு வந்து சமைப்பாங்களாம். நமக்கு தான் வித விதமான சமைப்பது என்றால் அலாதி ப்ரியம் என்பதால், ரொம்பவே ஆர்வத்துடன் பார்த்தேன், எல்லாம் என் நேரம், அன்று ஏதோ சிறப்பு என்று சொல்லி நிகழ்ச்சி தொகுப்பவரும், அவரு கூட சேர்ந்து வந்த செஃபும் சேர்ந்து இரண்டு கதாநாயகிகளை அழைத்தார்கள். பாவம் ரெண்டு பேருமே தமிழ் தெரியா நாயகிகளாம் (தெரிந்தவர்களே, தெரியாம நடிக்கும் போது, பாவம் அதுக என்ன பண்ணும் ;(((  )

ஆனால், அவுங்களை கூட்டிட்டு வந்து எதுக்காக நம்ம உயிரை வாங்கணும்னு தான் எனக்கு தெரியலை ;(( ரெண்டு பேருக்கும் வெங்காயத்தை தெரியலை, அதை விட அதுல ஒண்ணு வெங்காயத்தை, தமிழில் உச்சிரித்தது தான் கொடுமையோ கொடுமை, அப்படி என்ன சொன்னாங்கன்னு யோசிக்கறீங்க, அது வெங்ககாயம்’னு சொன்னாங்க ;((

நொந்தே போயிட்டேன், ஆனாலும், என்னதான் செய்றாங்க என்ற ஆர்வக்கோளாறில் தொடர்ந்து பார்த்தால், முதலில் வாழைப்பூ பஜ்ஜிங்கற பேரில் ரெண்டும் சேர்ந்து ஒன்றை செய்தாங்க. எதை கேட்டாலும் தவறான ஒரு பொருளை எடுத்து காமித்தார்கள், அதை விட கொடுமை அந்த மாடர்ன் பெண்களுக்கு (ஹோட்டலில் போய் கண்டதை உள்ளே தள்ளும் அழகிகளுக்கு) க்ரீம் என்ன என்பது தெரியாமல் போனது தான் நம் துரதிர்ஷ்டம்.

தொலைக்காட்சி என்பது இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கும் ஊடகமா இருந்து வருகிறது. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி முதல் எல்லாவற்றிலும் கலப்படம் தேவைதானா???

17 comments:

  1. பவி பதிவுகள் போட ஆரம்பிச்சாச்சா?! கலக்குங்க :)

    நீங்க பார்த்த ப்ரொகிராமில் விருந்தினர்கள் சொதப்புனாங்கன்னா நான் பார்த்ததில் நிகழ்ச்சியை நடத்துபவர் சொதப்பினார். டீப் ஃப்ரை ஷாலோ ஃப்ரைக்கு விளக்கம் சொன்னாங்க பாருங்க...டீப் ஃப்ரைன்னா நல்ல சிவக்க பொரிக்கறதாம் ஷாலோ ஃப்ரைன்னா லேசா மேலாக்குல பொரிக்கறதாம் :(

    ReplyDelete
  2. ஒரு வழியா பதிவு போட்டாச்சா? :)

    பவி அந்த கொடுமைய நானும் பாத்தேன். பயங்கர சிரிப்பு தான். ஆனா பாதிலேயே ஓடிட்டேன் (நம்ம தமிழை மறக்கடிச்சுடுவாங்க)

    ReplyDelete
  3. பவி தப்பித்தவறி என்கண்ணிலும் அந்த நிகழ்ச்ச்சி
    பட்டுதுப்பா. நாம தமிழ் ப்ரோக்ராம்தான் பாக்கரோமான்னு டௌட் வந்திச்சு. எனக்கு தெரிந்திருக்கும் அரை குறைத்தமிழும் மறந்திடும்.

    ReplyDelete
  4. பவி, நீங்க இதுபோல ஒரு நிகழ்ச்சிதானே பாத்தீங்க?
    ஹிந்தி சேனல்பக்கம் கொஞ்சமா எட்டி பாத்தீங்கன்னா
    நம்மதமிழ் நிகழ்ச்சி ஃபார் பெட்டர்னு சொல்வீங்க.

    ReplyDelete
  5. கவி, உங்க வாழ்த்துக்கு நன்றி கவி:))

    //டீப் ஃப்ரை ஷாலோ ஃப்ரைக்கு விளக்கம் சொன்னாங்க பாருங்க..// ஹா ஹா கவி. டிவி முன்னாடி உட்காருவதே வேஸ்ட் என்ற எண்ணம் தான் மிஞ்சுகிறது. நல்ல ப்ரோகிராமில் எதையோ கலந்து என்னமோ செய்கிறார்கள். நன்றி கவி

    ReplyDelete
  6. ஆமி, வாங்க ஆமி, மன்னிக்கனும் ஆமி, உங்க ப்ளாக்கில் பதிவிட முடிவதே இல்லை ஆமி. கண்டிப்பா பார்த்து பதிவு போடறேன்.

    பாதியிலேயே தப்பிச்சுட்டீங்களா??;(((

    என்னால முடியலை,அப்படி என்னதான் செய்யறாங்க, மனசை திடப்படுத்திட்டு உட்காந்து பார்த்தேன்:))

    ReplyDelete
  7. கோம்ஸ்,

    நீங்களுமா?? லிஸ்டில் நிறைய அப்பாவிகள் என்னை மாதிரியே மாட்டிருப்பீங்க போலவே :))

    அதுக்காக உங்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதை தான் ஏற்கமுடியவில்லை:))

    ReplyDelete
  8. லஷ்மி,

    வாங்க, வாங்க. ரொம்ப நன்றி லஷ்மி.

    தமிழே ததுங்கினத்தோம், இன்னும் ஹிந்தியா??? இதை விட கொடுமை செய்வாங்களா?? கிட்டத்தட்ட தமிழ் சேனல்களில் வரும் அனேக நிகழ்ச்சிகள் ஹிந்தியை காப்பி அடித்ததே தானே அதனால இருக்கும்;((

    ReplyDelete
  9. ஹாய் பவி வந்தாச்சாடா

    ReplyDelete
    Replies
    1. பாத்திமாம்மா, வாங்க, ரொம்ப லேட்டா சொல்றேன்

      Delete
  10. பவி உனக்கு போஸ்ட்பண்ணினேன் வருது ஆமிக்கு வரமாட்டிங்குதுடா ஏன்??

    ReplyDelete
  11. ஹ ஹ..."நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்"...ஹ ஹ...நான் பார்க்கலை பவி அந்த கொடுமைய....இப்போலாம் விளம்பரம் தான் பார்க்க ரசனையாவும்,ஆர்வமாவும் இருக்கு...))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஆனந்தி, சூப்பரு. உண்மையாவே விளம்பரங்கள் ரொம்ப நன்னாருக்கு.

      Delete
  12. இந்த நிகழ்ச்சிய உக்காந்து பாத்ததுக்கே உங்கள பாராட்டணும்..

    ReplyDelete
    Replies
    1. ஹாய், உட்கார முடியலை, ஆனாலும் ஆரம்பித்த காரியத்தை பாதியில் முடிக்க கூடாதே, அதான் முழுசா பார்த்தேன், பல்லை கடிச்சுன்டு.

      Delete
  13. ஹாய் பவி,பிளாக் தொடங்கியாச்சா!!இங்கும் கலக்க என்னுடைய வாழ்த்துக்கள்.நீங்களே நல்லா சமைக்கிற பொண்ணு,உங்களுக்கேன் இந்த விபரீத ஆசை எல்லாம் பவி??இனிமேல் சமையல் நிகழ்ச்சி பக்கமெல்லாம் போகாதீங்கோ பவீ !!

    ReplyDelete
    Replies
    1. ஹே, நித்தி, ப்ளாக் தொடங்கினேன்னு தான் பேரு, இந்த பக்கம் வரதே இல்லை.

      Delete