என்னுடைய உளறல்கள்




Friday, November 19, 2010

வணக்கம் சமையல்

அப்பாடா, ஒரு வழியா, எதை போடுவது போடுவதுன்னு யோசித்து யோசித்து, தலையெல்லாம் சொட்டையாவதற்கு முன்னாடி என் கண்ணில் பட்டது, சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, வணக்கம் சமையல் என்ற அருமையான, பெருமையா, அம்சமான நிகழ்ச்சி தான்

என்னடா அப்படி என்ன அந்த நிகழ்ச்சியில் இருக்குன்னு யோசிக்கிறீங்க, ஒரு பிரபலமான குக் (cook) கூட்டிட்டு வந்து சமைப்பாங்களாம். நமக்கு தான் வித விதமான சமைப்பது என்றால் அலாதி ப்ரியம் என்பதால், ரொம்பவே ஆர்வத்துடன் பார்த்தேன், எல்லாம் என் நேரம், அன்று ஏதோ சிறப்பு என்று சொல்லி நிகழ்ச்சி தொகுப்பவரும், அவரு கூட சேர்ந்து வந்த செஃபும் சேர்ந்து இரண்டு கதாநாயகிகளை அழைத்தார்கள். பாவம் ரெண்டு பேருமே தமிழ் தெரியா நாயகிகளாம் (தெரிந்தவர்களே, தெரியாம நடிக்கும் போது, பாவம் அதுக என்ன பண்ணும் ;(((  )

ஆனால், அவுங்களை கூட்டிட்டு வந்து எதுக்காக நம்ம உயிரை வாங்கணும்னு தான் எனக்கு தெரியலை ;(( ரெண்டு பேருக்கும் வெங்காயத்தை தெரியலை, அதை விட அதுல ஒண்ணு வெங்காயத்தை, தமிழில் உச்சிரித்தது தான் கொடுமையோ கொடுமை, அப்படி என்ன சொன்னாங்கன்னு யோசிக்கறீங்க, அது வெங்ககாயம்’னு சொன்னாங்க ;((

நொந்தே போயிட்டேன், ஆனாலும், என்னதான் செய்றாங்க என்ற ஆர்வக்கோளாறில் தொடர்ந்து பார்த்தால், முதலில் வாழைப்பூ பஜ்ஜிங்கற பேரில் ரெண்டும் சேர்ந்து ஒன்றை செய்தாங்க. எதை கேட்டாலும் தவறான ஒரு பொருளை எடுத்து காமித்தார்கள், அதை விட கொடுமை அந்த மாடர்ன் பெண்களுக்கு (ஹோட்டலில் போய் கண்டதை உள்ளே தள்ளும் அழகிகளுக்கு) க்ரீம் என்ன என்பது தெரியாமல் போனது தான் நம் துரதிர்ஷ்டம்.

தொலைக்காட்சி என்பது இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கும் ஊடகமா இருந்து வருகிறது. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி முதல் எல்லாவற்றிலும் கலப்படம் தேவைதானா???